இலங்கை செய்தி

கொழும்பில் நடைபெற்ற விசேட சுவிஷேச ஆராதனை

G.V.M ஊழியத்தின் 7வது வெளிப்படையான ஆராதனைக் கூட்டம் கொழும்பு 09, தெமட்டகொடை(Dematagoda) சகஸ்புர(Sagaspura) தொடர்மாடி குடியிருப்பு மண்டபத்தில், பிரதேச மக்களின் பங்களிப்பில் மிக பக்திபூர்வமாக நடைபெற்றது.

அப்போஸ்தலர் விஷ்வா தலைமையில் நடைபெற்ற மேற்படி சுவிசேஷ ஆராதனையில், “நாட்டில் ஏற்பட்ட இயற்கை அனர்த்த சூழ்நிலையில் ஏற்பட்ட பேரிழப்பை தடுக்கவும், அதில் பாதிக்கப்பட் மக்களை இழப்பிலிருந்து மீண்டு வரவும், “இருள் நீக்கும் வெளிச்சம்” என்ற வாக்கிற்கிணங்க சர்வ வல்லமையும் பொருந்திய இயேசு கிறிஸ்துவிற்கு விசேட பிரார்த்தனையும், சுவிசேஷ ஆராதனைகளும் இடம்பெற்றது.

மேலும், இந்த நிகழ்வில் விசேட செய்தி வழங்குபவர்களாக சுவிசேஷகர் A. சசிகுமார் மற்றும் அப்போஸ்தலர் விஷ்வா ஆகியோர் சேவையாற்றியதுடன், பாஸ்டர் மைக்கல், பாஸ்டர் ஜரீனா, பாஸ்டர் ஜீவக மற்றும் பாஸ்டர் ஜீவன் ஆகியோரும் கலந்துகொண்டு பிரார்த்தனைகளை வழங்கியிருந்தனர்.

மேலும் இந்நிகழ்வில் ஏராளமான பொதுமக்கள் சுகம் பெற வருகை தந்திருந்ததோடு ஜீ.வி.எம். ஊழியத்தின் உறுப்பினர்கள், இளையோர் அணியினர் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் இங்கு ஆசிர்வதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

KP

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!