இலங்கையில் திருமண வயதுடையவர்களுக்கு சுகாதார பிரிவின் விசேட அறிவிப்பு

திருமண வயதுடைய இளைஞர்களும் பெண்களும் திருமணத்திற்கு முன் முழு இரத்தப் பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தலசீமியா நோயை கட்டுப்படுத்துவதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக என சுகாதார பிரிவு அறிவித்துள்ளது.
தலசீமியா நோயாளிகள் ஏனைய நோய் தொற்றாளர்களுடன் திருமணம் செய்வதைத் தவிர்த்தால், இலங்கையிலிருந்து இந்த நோயை முற்றிலுமாக ஒழிக்க முடியும் என சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் (தொற்றுநோய்கள் அல்லாத நோய்கள்) சம்பிகா விக்ரமசிங்க தெரிவித்தார்.
தலசீமியா என்பது மரபணு ரீதியாகப் பரவும் நோய் என்பதை விளக்கிய அவர், இலங்கை மக்கள் தொகையில் 10 வீதமானோர் இந்த மரபணுவைக் கொண்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
இலங்கையில் தற்போது கிட்டத்தட்ட 2,000 தலசீமியா நோயாளிகள் இருப்பதாகவும் தெரிவித்தார். தேசிய சுகாதார பாதீட்டில் 15 வீதமானோர் ஆண்டுதோறும் அவர்களின் சிகிச்சைக்காக ஒதுக்கப்படுகிறது. ஒரு நோயாளிக்கு ஆண்டுக்கு ரூ.10 மில்லியனுக்கும் அதிகமாகச் செலவிடப்படுகிறது.
என்பு மச்சை மாற்று அறுவை சிகிச்சைகளுக்கு, ஒரு நோயாளிக்கு ரூ.40 மில்லியனுக்கும் அதிகமாகச் செலவாகும் என்று அவர் தெரிவித்தார்.
குருநாகல், அனுராதபுரம், பதுளை, அம்பாறை மற்றும் மட்டக்களப்பு போன்ற பகுதிகளிலிருந்து 100க்கும் மேற்பட்ட தலசீமியா நோயாளிகள் பதிவாகியுள்ளனர்.
ஒவ்வொரு ஆண்டும், இலங்கையில் சுமார் 60 குழந்தைகள் தலசீமியாவுடன் பிறப்பதாகவும் தெரிவித்துள்ளார்.