வேலைக்கு 40 நிமிடங்கள் முன்னதாக வந்த ஸ்பானிஷ் பெண் பணி நீக்கம்
ஸ்பெயினில்(Spain) ஊழியர் ஒருவர், நிறுவனத்தின் ஒப்பந்த நேரமான காலை 7:30 மணியை கடைபிடிக்குமாறு வாய்மொழியாகவும் எழுத்துப்பூர்வமாகவும் பலமுறை எச்சரித்த போதிலும், 40 நிமிடங்கள் முன்னதாகவே அலுவலகத்திற்கு வந்ததற்காக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
மெட்ரோவின் கூற்றுப்படி, 22 வயதான ஊழியர் 2023 முதல் சீக்கிரமாக வருவதை நிறுத்துமாறு அந்த ஊழியர் பலமுறை எச்சரிக்கப்பட்டுள்ளார்.
அவரது முதலாளி இறுதியில் பொறுமை இழந்து கடுமையான தவறான நடத்தைக்காக அவரை பணிநீக்கம் செய்துள்ளார்.
மேலும், அவர் தொடர்ந்து சீக்கிரமாக வருவது அவர் அறிவுறுத்தல்களை புறக்கணிப்பதாகவும் நிறுவனத்திற்கு உண்மையிலேயே பங்களிக்கவில்லை என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.




