ஹமாஸுக்கு நிதியுதவி செய்த சீன நாட்டவரை கைது செய்த ஸ்பெயின் காவல்துறை
சுமார் €600,000 கிரிப்டோகரன்சி(cryptocurrency) பரிமாற்றங்கள் மூலம் ஹமாஸ்(Hamas) போராளிக் குழுவிற்கு நிதியளித்ததாக சந்தேகத்தின் பேரில் பார்சிலோனாBarcelona) அருகே சிகை அலங்கார நிலையம் வைத்துள்ள 38 வயது சீன(Chinese) நாட்டவரை ஸ்பெயின்(Spain) காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
ஹமாஸ் குழுவிற்கு குற்றம் சாட்டப்பட்டவரிடம் இருந்து 31 கிரிப்டோ பரிவர்த்தனைகளை புலனாய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
அவை அக்டோபர் 7, 2023 அன்று இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்திய இஸ்லாமியக் குழுவால் பயன்படுத்தப்பட்ட ஒரு நிறுவனத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படுகிறது.
இந்நிலையில், சந்தேக நபரின் சாத்தியமான நோக்கங்கள் மற்றும் அவர் ஹமாஸுடன் தெரிந்தே தொடர்பு கொண்டாரா அல்லது ஒரு இடைத்தரகராக இருந்தாரா என்பது குறித்து காவல்துறையினர் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டனர்.
சந்தேக நபரின் சிகை அலங்கார நிலையம் மற்றும் வீட்டில் நடத்தப்பட்ட சோதனைகளின் போது, அதிகாரிகள் கிரிப்டோ சொத்துக்கள், பணம், சுமார் 9,000 சுருட்டுகள், நகைகள், கணினிகள் மற்றும் தொலைபேசிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
சமீபத்திய ஆண்டுகளில், தீவிரவாதக் குழுக்கள் நிதி பரிவர்தனைகளுக்காக கிரிப்டோகரன்சி முறையை பயன்படுத்துகிறது குறிப்பிடத்தக்கது.




