ஸ்பெயின் மக்களை கடற்கரைக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை
ஸ்பெயின் நாட்டின் பிரபல சுற்றுலா தலமான கிரான் கேனரி தீவு அருகே கடற்கரைக்கு மக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
கடலில் ஏற்பட்ட எண்ணெய் கசிவால் இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அங்குள்ள துறைமுகத்துக்கு எரிபொருள் நிரப்ப வந்த சரக்கு கப்பலில் நேர்ந்த விபத்தால், மூன்றாயிரம் கிலோ கப்பல் எரிபொருள் எண்ணெய் கடலில் கொட்டியதாக கூறப்படுகிறது.
அருகே உள்ள குடிநீர் உற்பத்தி ஆலை உள்ளதால், எண்ணெய் கசிவு பரவும் பகுதிகள் டிரோன்கள் மூலம் கண்காணிக்கப்பட்டுவருகின்றன.
(Visited 61 times, 1 visits today)





