ஸ்பெயினில் மலிவுக்கட்டண விமானச் சேவை நிறுவனங்களுக்கு மிகப்பெரிய அபராதம்
ஸ்பெயின் ஐந்து மலிவுக்கட்டண விமானச் சேவை நிறுவனங்கள் முறையற்ற நடவடிக்கைகளை மேற்கொண்டதாக தெரியவந்துள்ளது.
இந்த நிலையில் அந்த நிறுவனத்திற்கு 186 மில்லியன் டொலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
பயணிகள் விமானத்துக்குள் சுயமாகக் கொண்டுசெல்லும் பயணப் பைகளுக்குக் கட்டணம் வசூலித்தது போன்றவற்றுக்காக அவை அபராதத்தைச் சந்தித்துள்ளன.
Ryanair நிறுவனத்துக்கு ஆகப் பெரிய அபராதத் தொகையாகக் கிட்டத்தட்ட 112 மில்லியன் டொலர் விதிக்கப்பட்டது. ஸ்பெயினின் பயனீட்டாளர் உரிமைகள் அமைச்சு Norwegian, Volotea மளிவுக்கட்டண விமானச் சேவை நிறுவனங்களுக்குச் சில தடைகளையும் விதித்தது.
பயணிகள் சுயமாகத் தூக்கிச் செல்லும் பயணப் பைகள், பிள்ளைகளுக்காக இருக்கை ஒதுக்குவது போன்றவற்றுக்குக் கூடுதல் கட்டணம் விதிக்கப்படும் நடைமுறைகளுக்குத் தடை விதிக்கத் திட்டமிடுவதாக அமைச்சு கூறியது.