கம்போடியாவில் இருந்து நாடு கடத்தப்படும் தென்கொரியர்கள் – இழப்பீடு வழங்கவும் தீர்மானம்!
ஆன்லைன் மோசடி வழக்குகளில் ஈடுபட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் கம்போடியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தென்கொரியர்கள் இந்த வாரம் விசாரணைகளை எதிர்கொள்ளவுள்ளனர். அத்துடன் அவர்கள் தங்கள் சொந்த இடங்களுக்கு அனுப்பப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பிலான உத்தியோகப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது.
சமீபத்திய மாதங்களில் கம்போடியாவில் நடத்தப்பட்ட ஒரு கடுமையான சோதனை நடவடிக்கையில் தென்கொரியர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.
அவர்கள் கம்போடியாவில் உள்ள மோசடி வளாகத்தில் வேலை செய்ய கட்டாயப்படுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதில் தென்கொரிய மாணவர் ஒருவர் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்தார்.
இந்த விவகாரம் தென் கொரிய மக்கள் இடையே கடும் சீற்றத்தை ஏற்படுத்தியிருந்தது. இதனைத் தொடர்ந்து கம்போடியா மற்றும் தென்கொரியாவின் கூட்டு நடவடிக்கையின் கீழ் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் 200இற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
அவர்கள் கம்போடியாவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது தென்கொரியாவிற்கு அனுப்பப்படவுள்ளனர். மேலும் அவர்களுக்கு 48.6 பில்லியன் வோன் இழப்பீடு வழங்கப்படவுள்ளதாகவும் கூறப்படுகிறது.





