தென் கொரிய பாதுகாப்பு அமைச்சர் கிம் யோங்-ஹியூ பதவி விலகல்
தென்கொரியாவில் வடகொரிய ஆதரவாளர்களை விரட்டுவதற்காக ராணுவச் சட்டத்தை அறிவித்த பாதுகாப்புத்துறை அமைச்சர் எதிர்க்கட்சிகளின் கொந்தளிப்பு காரணமாக தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
தென்கொரியாவில், வடகொரிய ஆதரவாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டதால், அவர்களை வெளியேற்றுவதற்கும், ஒடுக்குவதற்கும் இந்த அவசர நிலை(ராணுவ சட்டம்) அறிவிக்கப்படுவதாக தெரிவித்தார்.
ஆனால் இந்த அறிவிப்புக்கு எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சனங்களை எழுப்பியிருந்தன.
இந்த அவசர நிலைக்கு எதிராக எதிர்க்கட்சி எம்பிக்கள் அனைவரும் ஒன்று திரண்டு வாக்களித்துள்ளனர். எனவே, அவசர நிலை அறிவிப்பு செல்லாது என்று அந்நாட்டு நாடாளுமன்ற சபாநாயகர் அறிவித்துள்ளார்.
இது போராட்டக்காரர்களுக்கு மகிழ்ச்சியளித்தாலும், அதிபர் பதவி விலக வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், தென்கொரியாவின் பாதுகாப்புத்துறை அமைச்சர் தனது பதவியை ராஜினாமா செய்திருக்கிறார்.
பாதுகாப்புத்துறை அமைச்சர் கிம் யோங்-யூன் ராஜினாமாவை அதிபர் ஏற்றுக்கொண்டிருக்கிறார். அவருக்கு பதிலாக புதிய பாதுகாப்பு துறை அமைச்சராக சோய் பியூங் ஹயூக் என்பவரை நியமித்திருக்கிறார்.
இவர் தென்கொரியாவின் சவுதிக்கான தூதராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.