யூனின் பதவி நீக்கத்தை அடுத்து ஜூன் 3ஆம் திகதி தென் கொரிய அதிபர் தேர்தல்

தென்கொரிய அரசாங்கம், ஜூன் 3ஆம் தேதி அதிபர் தேர்தலை நடத்த ஒப்புதல் அளித்துள்ளது.
சில மணி நேரம் நீடித்த ராணுவச் சட்டத்தை அறிமுகப்படுத்தியதால் அதிபர் யூன் சுக் இயோல் பதவியிலிருந்து அகற்றப்பட்டார்.
செவ்வாய்க் கிழமை (ஏப்ரல் 8) தேசிய தேர்தல் ஆணையத்துடன் ஆலோசனை நடத்திய பிறகு அமைச்சரவை தேர்தல் குறித்து முடிவு செய்தது.
தேர்தலுக்காக ஒரு நாள் விடுமுறை அளிப்பதற்கு அமைச்சரவையின் அங்கீகாரம் அவசியம்.
கடந்த டிசம்பர் 3ஆம் திகதி ராணுவச் சட்டத்தைக் கொண்டு வந்ததால் தனது கடமையிலிருந்து மீறிச் செயல்பட்டதற்காக அரசியலமைப்பு நீதிமன்றத்தால் யூன் அதிபர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.
ராணுவச் சட்டத்தின்போது நாடாளுமன்ற நடவடிக்கைகளைத் துருப்புகள் நிறுத்த முயற்சி செய்ததால் நாட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
அதிபர் பதவி காலியாக இருந்தால் 60 நாள்களுக்குள் தேர்தல் சட்டப்படி தேர்தல் நடத்த வேண்டும்.