தென்கொரியா விமான விபத்து : பண இழப்பீட்டுத் திட்டத்தைக் கொண்டு வருமாறு கோரிக்கை!
தென் கொரியாவின் கொடிய விமான விபத்தில் உயிரிழந்த குடும்பத்தினர் தங்களால் இயன்றவரை தங்களின் அன்புக்குரியவர்களின் உடல்களை மீட்குமாறு அதிகாரிகளை வலியுறுத்தியுள்ளனர்.
பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களின் பிரதிநிதியான பார்க் ஹான் ஷின், மீட்புக்கு உதவ கூடுதல் நிபுணர்களை அனுப்புமாறு அரசாங்கத்திடம் கேட்டுள்ளார்.
தென் கொரிய விமான நிறுவனமான ஜெஜு ஏர், பெற்றோரை இழந்த குழந்தைகள் உட்பட பாதிக்கப்பட்டவர்களுக்கு பண இழப்பீட்டுத் திட்டத்தைக் கொண்டு வருமாறு பார்க் அழைப்பு விடுத்தார்.
“(Jeju Air) தன்னால் இயன்ற அனைத்தையும் செய்துள்ளது என்பதை இழந்த குடும்பங்கள் உணர ஒரே வழி, இழந்த குடும்பங்களுக்கு நிதி உதவி செய்வதே” என்று அவர் கூறினார்.
ஜெஜு ஏர் நிறுவனத்தால் இயக்கப்படும் போயிங் 737-800 விமானம் முவான் சர்வதேச விமான நிலையத்தில் ஓடுபாதையில் இருந்து சறுக்கி, சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில் இருவரை தவிற 179 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.