தென்கொரியா விமான விபத்து : பலி எண்ணிக்கை 167 ஆக உயர்வு!
தென் கொரியாவில் இடம்பெற்ற விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறைந்தது 167 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஜெஜு ஏர் விமானம் முவான் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கும்போது ஓடுபாதையில் இருந்து விலகிச் சென்று சுவரில் மோதி விபத்துக்குள்ளானது.
புதுப்பிக்கப்பட்ட இறப்பு எண்ணிக்கையை தேசிய தீயணைப்பு நிறுவனம் வழங்கியது. விபத்து நடந்த சில மணிநேரங்களில் உத்தியோகபூர்வ இறப்பு எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்துவந்த நிலையில் 124 பேர் பலியாகியதாக தெரிவிக்கப்படுகிறது.
(Visited 3 times, 1 visits today)