E-8 விசா பிரிவின் கீழ் இலங்கையர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கும் தென்கொரியா!

தென் கொரியாவில் E-8 விசா பிரிவின் கீழ் வேலைவாய்ப்புகளை வழங்க அமைச்சரவை ஒப்புதல் கிடைத்துள்ளதாகவும், இந்த வேலைவாய்ப்புகள் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தால் மட்டுமே வழங்கப்படும் என்றும் பணியகத்தின் தலைவர் கோசல விக்ரமசிங்க தெரிவித்தார்.
E-8 விசா பிரிவின் கீழ் வேறு எந்த நபரோ அல்லது வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனமோ வேலை வாய்ப்புகளை வழங்க அனுமதிக்கப்படவில்லை என்றும், எனவே அவர்களுக்கு பணம் கொடுப்பதைத் தவிர்க்கவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தென் கொரியாவில் E-9 விசா பிரிவின் கீழ் வேலைவாய்ப்பு பெற்ற இளைஞர்கள் குழுவிற்கு விமான டிக்கெட்டுகள் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துவெளியிடும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
எதிர்காலத்தில் இந்தப் பணிகளுக்கான ஆட்சேர்ப்புக்கான வழிகாட்டுதல்கள் தயாரிக்கப்படும் என்றும், அதன்படி, ஆட்சேர்ப்பு முறை மற்றும் தேவையான அடிப்படைத் தகுதிகள் குறித்து ஊடகங்கள் மூலம் வேலை தேடுபவர்களுக்குத் தெரிவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.