வடகொரியாவின் குப்பை பலூன் அச்சத்தில் தென்கொரியா!

வடகொரியாவிலிருந்து இன்று முதல் குப்பைகள் நிறைந்த மேலும் பல பலூன்கள் வந்துசேரும் என்று எதிர்பார்ப்பதாக தென்கொரியா குறிப்பிட்டுள்ளது.
பழுதடைந்த மின்கலன்கள், சிகரெட் துண்டுகள், உரம் முதலியவை அடங்கிய சுமார் 260 பலூன்களை வடகொரியா செவ்வாய், புதன்கிழமைகளில் தென்கொரியாவுக்கு அனுப்பியது.
மனிதநேயமற்ற அந்த நடவடிக்கை, தரந்தாழ்ந்த ஒன்று என்று சோலின் கூட்டுப்படைத் தளபதி குறிப்பிட்டுள்ளார்.
வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன்னுக்கு எதிரான துண்டுப் பிரசுரங்கள் அடங்கிய பலூன்களைத் தென்கொரிய ஆர்வலர்கள் அந்நாட்டு எல்லைக்கு அனுப்பியிருந்தனர்.
அதற்குப் பதிலடியாகவே தற்போது நேர்மையான முறையில் பரிசுகள் தரப்பட்டுள்ளதாக கூட்டுப்படைத் தளபதி குறிப்பிட்டுள்ளார்.
(Visited 13 times, 1 visits today)