ஆபத்தான வலிகளை பொருட்படுத்தாமல் புலம்பெயரும் தென் அமெரிக்கர்கள் – 2024 இல் ஏற்பட்டுள்ள மாற்றம்!
2024 ஆம் ஆண்டில் 300,000 க்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்தோர் டேரியன் இடைவெளியைக் கடந்து பனாமாவிற்குச் சென்றுள்ளனர்.
இது ஒரு வருடத்திற்கு முன்னர் தென் அமெரிக்காவிலிருந்து ஆபத்தான காட்டைக் கடந்த சாதனை எண்ணிக்கையை விட 42% குறைவு என்று பனாமாவின் இடம்பெயர்வு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆபத்தான டேரியன் கேப் கொலம்பியாவை மத்திய அமெரிக்க நாடான பனாமாவுடன் இணைக்கிறது. அமெரிக்காவை அடைய நினைக்கும் பலர் இந்த ஆபத்தான வலியை பின்பற்றுகின்றனர்.
பனாமேனிய ஜனாதிபதி ஜோஸ் ரவுல் முலினோ கடந்த ஜூலை மாதம் பதவியேற்றதில் இருந்து இடம்பெயர்வு குறித்த கடினமான நிலைப்பாட்டை எடுத்துள்ளார்.
இதில் டேரியனின் பகுதிகளுக்கு முள்வேலி அமைத்தல், அபராதம் விதித்தல் மற்றும் புலம்பெயர்ந்தோரை நாடு கடத்த அமெரிக்காவால் நிதியளிக்கப்பட்ட விமானங்களைப் பயன்படுத்துதல் ஆகியவை அடங்கும்.
பனாமாவின் தேசிய இடம்பெயர்வு சேவையின் அதிகாரிகள் ராய்ட்டர்ஸிடம் 302,203 புலம்பெயர்ந்தோர் கடந்த ஆண்டு டேரியனைக் கடந்துள்ளதாக தெரிவித்துள்ளது.
இது 2023 இல் பதிவுசெய்யப்பட்ட 520,085 இல் இருந்து 42% குறைந்துள்ளது. 2024 இல் குடியேறியவர்களில் 69% வெனிசுலாவைச் சேர்ந்தவர்கள் என்று அவர்கள் தெரிவித்தனர்.
சட்டவிரோத இடம்பெயர்வு பனாமா நகரத்தையோ அல்லது நாட்டின் பிற பகுதிகளையோ அடையாமல் இருக்க நாங்கள் ஒவ்வொரு நாளும் உழைத்து வருகிறோம்” என்று முலினோ தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.