தென்னாப்பிரிக்காவின் முன்னாள் அதிபர் மண்டேலா பயன்படுத்திய பொருட்களை ஏலமிட நடவடிக்கை!
தென்னாப்பிரிக்காவின் முன்னாள் அதிபரும் நிறவெறிக்கு எதிரான வீரருமான நெல்சன் மண்டேலாவுக்கு சொந்தமான டஜன் கணக்கான கலைப்பொருட்கள் நிவ்யோர்க்கில் ஏலத்தில் விற்பனை செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பெப்ரவரி மாதம் 22 ஆம் திகதி குர்ன்சியின் ஏல இல்லத்தில் குறித்த பொருட்கள் ஏலத்தில் விடப்படவுள்ளன. இதன் மொத்த மதிப்பு 02 தொடக்கம் 03 மில்லியன் வரை இருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது.
“கிட்டத்தட்ட நூறு பொக்கிஷமான பொருட்கள் – ஏதோ ஒரு வகையில் மண்டேலாவின் வாழ்வில் பயன்படுத்தப்பட்ட பொருட்கள் ஏலத்தில் விற்பனை செய்யப்படவுள்ளன.
இதன்படி மண்டேலாவின் 1993 தென்னாப்பிரிக்க அடையாள புத்தகம், மண்டேலாவின் புகழ்பெற்ற பசுமையான ஃபெர்ன்-பாட்டர்ன் ‘மடிபா’ சட்டை, அவரது சின்னமான ஏவியேட்டர் சன்கிளாஸ்கள், முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவின் பரிசுப் போர்வை, சிற்பங்கள் மற்றும் எழுதப்பட்ட தனிப்பட்ட கடிதங்கள் ஆகியவை ஏலத்தில் விற்பனை செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள மண்டேலாவின் மகள் மகசிவே மண்டேலா, “இயற்கை என் கண்களை மூடுவதற்கு முன், என் தந்தைக்கு ஒரு நினைவுத் தோட்டம் ஒன்றைக் கொண்டுவர விரும்புவதாகவும், அதைத்தான் என் தந்தை விரும்புவார் என்றும் தெரிவித்துள்ளார்.