ஸ்டெம்புகளை எட்டி உதைத்த தென் ஆப்பிரிக்க வீரருக்கு அபராதம்
தென் ஆப்பிரிக்கா- பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான 2வது ஒருநாள் போட்டி கேப்டவுனில் நடைபெற்றது.
இப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் விளையாடிய பாகிஸ்தான் அணி 49.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 329 ரன்களைக் குவித்தது.
இதனையடுத்து கடின இலக்கை நோக்கி களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணியில் ஹென்ரிச் கிளாசென் 97 ரன்களைச் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்ததால் அந்த அணி 43.1 ஓவர்களில் 248 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இதன்மூலம் பாகிஸ்தான் அணி 81 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன் 2-0 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றியது.
இந்நிலையில் இப்போட்டியில் ICC நடத்தை விதிகளை மீறியதாக தென் ஆப்பிரிக்க அணியின் விக்கெட் கீப்பர் பேட்டர் ஹென்ரிச் கிளாசனுக்கு ICC அபராதம் விதித்துள்ளது.
கிளாசனுக்கு போட்டி கட்டணத்தில் இருந்து 15 சதவீதம் அபராதம் விதிப்பதுடன், ஒரு கரும்புள்ளியையும் வழங்குவதாக ICC அறிவித்துள்ளது.
மேலும் இதனை கிளாசனும் ஒப்புக்கொண்டதன் காரணமாக மேற்கொண்டு விசாரணைக்கு வர தேவையில்லை என்று ICC அறிவித்துள்ளது.