இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது T20 போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி வெற்றி
பிரபல தென் ஆப்பிரிக்கா அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட், ஒருநாள் மற்றும் T20 போட்டிகளில் விளையாடி வருகிறது.
இந்த சுற்றுப்பயணத்தின் T20 தொடரின் இரண்டாவது போட்டி பஞ்சாப்பின் சண்டிகரில் நடைபெற்றது.
இந்த போட்டியின் நாணய சுழற்சியை வென்ற இந்திய அணி முதலில் பந்து வீச்சை தெரிவு செய்தது.
அந்தவகையில், முதலில் களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 213 ஓட்டங்கள் பெற்றது.
தென் ஆப்பிரிக்க அணி சார்பில், டி காக்(De Kock) 90 ஓட்டங்களும் டெனோவன் பெரைரா(Donovan Ferreira) 30 ஓட்டங்களும் பெற்றனர்.
இந்நிலையில், 214 ஓட்ட இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணி 19.1 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 162 ஓட்டங்களை மட்டுமே பெற்றது.
இந்திய அணி சார்பில், அக்சர் படேல்(Axar Patel) 21 ஓட்டங்களும் திலக் வர்மா(Tilak Varma) 62 ஓட்டங்களும் குவித்தனர்.
இறுதியில், இந்திய அணியை 51 ஓட்டங்களால் வீழ்த்தி தொடரை 1-1 என்ற கணக்கில் சமநிலை படுத்தியுள்ளது.
இரு அணிகளுக்கும் இடையிலான மூன்றாவது T20 போட்டி 14ம் திகதி இமாச்சல் பிரதேசத்தில்(Himachal Pradesh) உள்ள தரம்சலா(Dharamsala) மைதானத்தில் நடைபெறவுள்ளது.




