செய்தி விளையாட்டு

27 வருடத்திற்குப் பிறகு ICC கோப்பை வென்ற தென் ஆப்பிரிக்கா

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் கடந்த 11ஆம் தேதி தொடங்கியது.

டாஸ் வென்ற தென்ஆப்பிரிக்கா பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 212 ரன்னில் ஆல் அவுட்டானது.

தொடர்ந்து ஆடிய தென்ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் ஆரம்பம் முதலே திணறியது. இதனால் தென் ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 138 ரன்னில் சுருண்டது.

2வது இன்னிங்சில் 207 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. மிட்செல் ஸ்டார்க் 58 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இதையடுத்து, தென்ஆப்பிரிக்காவுக்கு 282 ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. தொடக்க ஆட்டக்காரர் ரிக்கல்டன் 6 ரன்னிலும், வியான் முல்டர் 27 ரன்னிலும் அவுட்டாகினர். மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் மார்கிரம் பொறுப்புடன் ஆடி சதமடித்து அசத்தினார்.

அவருக்கு கேப்டன் பவுமா நன்கு ஒத்துழைப்பு கொடுத்து அரை சதம் கடந்தார். 3வது விக்கெட்டுக்கு மார்கிரம்- பவுமா ஜோடி 143 ரன்கள் சேர்த்துள்ளது.

மூன்றாம் நாள் முடிவில் தென் ஆப்பிரிக்கா 2 விக்கெட்டுக்கு 213 ரன்கள் எடுத்திருந்தது. மார்கிரம் 102 ரன்னுடனும், பவுமா 65 ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இன்று 4ஆவது நாள் ஆட்டம் தொடங்கியது, மேலும் ஒரு ரன் எடுத்து 66 ரன்னில் ஆட்டமிழந்தார். மறுமுனையில் மார்கிரம் நங்கூரமாக நின்ற விளையாடினார். ஸ்டப்ஸ் 8 ரன்னில் ஏமாற்றம் அடைந்தார். அடுத்து வந்த பெடிங்காம் மார்கிராமுக்கு சப்போர்ட்டாக விளையாடினார்.

அணியின் வெற்றிக்கு 6 ரன்கள் தேவை என்றபோது, மார்கிராம் 136 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். 7ஆவது விக்கெட்டுக் பெடிங்காம் உடன் வெர்ரைன் ஜோடி சேர்ந்தார்.

இறுதியாக 83.4 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 282 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

(Visited 5 times, 1 visits today)

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி