செய்தி விளையாட்டு

3வது போட்டியில் தென் ஆப்பிரிக்கா வெற்றி – தொடரை கைப்பற்றிய ஆப்கானிஸ்தான்

ஆப்கானிஸ்தான் – தென் ஆப்பிரிக்கா இடையிலான 3வது ஒருநாள் போட்டி சார்ஜாவில் நடந்தது.

டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.அதன்படி, முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான் 169 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. சிறப்பாக ஆடிய குர்பாஸ் 89 ரன்னில் ஆட்டமிழந்தார்.

தென் ஆப்பிரிக்கா சார்பில் நிகிடி, பெலுக்வாயோ, நபா பீட்டர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

இதையடுத்து, 170 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை நோக்கி தென் ஆப்பிரிக்கா களமிறங்கியது.

ஆரம்பம் முதல் நிதானமாக ஆடினர்.டோனி சோர்சி 26 ரன்னும், பவுமா 22 ரன்னும், ஹென்ரிக் 18 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

அடுத்து இறங்கிய மார்கிரம் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்தார்.இறுதியில், தென் ஆப்பிரிக்கா 3 விக்கெட்டுக்கு 170 ரன்கள் எடுத்து வென்றது. மார்கிரம் 69 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

ஆனாலும், ஒருநாள் தொடரை ஆப்கானிஸ்தான் 2-1 என கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்துள்ளது.

ஆட்டநாயகன் மற்றும் தொடர் நாயகன் விருது குர்பாசுக்கு அளிக்கப்பட்டது.

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!