செய்தி

இலங்கைக்கு எதிரான தென் ஆப்பிரிக்க டெஸ்ட் அணி அறிவிப்பு

இலங்கை கிரிக்கெட் அணி தற்போது நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஆடி வருகிறது. இந்த தொடர் நிறைவடைந்ததும் இலங்கை அணி தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆட உள்ளது.

இந்த தொடர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு உட்பட்ட தொடர் என்பதால், இரு அணிகளுக்கும் இந்த தொடர் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. இந்த தொடர் வரும் 27ம் தேதி தொடங்குகிறது.

இந்நிலையில், இந்த தொடருக்கான தென் ஆப்பிரிக்க அணி அறிவிக்கப்பட்டுள்ளது. தென் ஆப்பிரிக்க அணிக்கு டெம்பா பவுமா கேப்டனாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்

தென் ஆப்பிரிக்க அணி விவரம் வருமாறு:

டெம்பா பவுமா (கேப்டன்), டேவிட் பெடிங்ஹாம், ஜெரால்ட் கோட்சி, டி ஜோர்ஜி, மார்கோ ஜான்சன், கேசவ் மகராஜ், மார்க்ரம், வியான் முல்டர், செனுரன் முத்துசாமி, டேன் பீட்டர்சன், ககிசோ ரபாடா, டிரிஸ்டன் ஸ்டப்ஸ், ரியான் ரிக்கெல்டன், கைல் வேரின்.

(Visited 34 times, 1 visits today)

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி