இஸ்ரேலுக்கு எதிராக தென்னாப்பிரிக்கா வழக்கு தாக்கல்
இஸ்ரேல் இனப்படுகொலை செய்வதாகக் கூறி, தென்னாப்பிரிக்கா நெதர்லாந்தின் ஹேக் நகரில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இனப்படுகொலைச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு 84 பக்கங்களைக் கொண்டதாக வெளிநாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன.
எனினும் தென்னாபிரிக்காவின் குற்றச்சாட்டு அடிப்படையற்றது என இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
தென்னாபிரிக்கா வழக்குப்பதிவு செய்ததன் மூலம் தம்மை அவமதித்துள்ளதாக இஸ்ரேல் வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
எவ்வாறாயினும், இனப்படுகொலையைத் தடுப்பதில் தமது நாடு உறுதியாக இருப்பதாகவும், பாலஸ்தீனியர்களின் மரணம் வருத்தமளிப்பதாகவும் தென்னாபிரிக்க ஜனாதிபதி அலுவலகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
(Visited 12 times, 1 visits today)