விரைவில் அழியும் பூமி : விஞ்ஞானிகள் வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்!
இன்னும் 250 மில்லியன் ஆண்டுகளில் பூமியில் உள்ள உயிரினங்கள் அழிந்துவிடும் என ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.
பிரிஸ்டல் பல்கலைக்கழகம் மேற்கொண்ட ஆய்வில் குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆய்வின்படி, பூமி அழியும்போது அனைத்து பாலூட்டிகளையும் அழிக்கும் ஒரு வெகுஜன அழிவு ஏற்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த காலகட்டத்தில், பூமியில் உள்ள எந்த உயிரினமும் 40 முதல் 70 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையை எதிர்கொள்ள நேரிடும் என்றும் பூமியின் அனைத்துக் கண்டங்களும் ஒன்றாகச் சேர்ந்து வெப்பமான, வறண்ட மற்றும் பெரும்பாலும் வாழத் தகுதியற்ற சூப்பர் கண்டத்தை உருவாக்கும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
இந்த நிமிடத்தில் இருந்து படிம எரிபொருட்களை எரிப்பதை நிறுத்தினாலும் இந்த நிலை உருவாகும் என ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
66 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பூமியில் பாரிய விண்வெளிப் பாறை மோதியதில் டைனோசர்கள் எவ்வாறு அழிந்ததோ, அதுபோன்ற ஒரு நிலை மீண்டும் ஏற்படும் என ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.