இந்தியா இன்றைய முக்கிய செய்திகள் செய்தி

சோனியா காந்தி டெல்லி மருத்துவமனையில் அனுமதி

கடந்த சில நாட்களுக்கு முன்னர், உயர் ரத்த அழுத்தம் காரணமாக இமாச்சல பிரதேச மாநிலம் சிம்லாவில் உள்ள இந்திரா காந்தி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். பிறகு, டெல்லி வந்து மருத்துவ பரிசோதனை மேற்கொண்டார்.

இந்நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி மீண்டும் டெல்லியிலுள்ள சர் கங்கா ராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வயிறு தொடர்பான பிரச்சினை காரணமாக மருத்துவமனையின் இரைப்பை சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல கடந்த பிப்ரவரி மாதத்திலும் வயிறு வலி காரணமாக காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி டெல்லி சர் கங்கா ராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சைக்குப் பின்னர் வீடு திரும்பியது குறிப்பிடத்தக்கது.

இத்தாலியில் பிறந்த சோனியா காந்திக்கு தற்போது 78 வயதாகிறது. கடந்த 1999 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலின் போது சோனியா காந்தி வெற்றி பெற்று முதல் முறையாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக மாறினார்.

(Visited 7 times, 1 visits today)

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி