ஆஸ்திரேலியா செய்தி

தெலுங்கானா பாஜக தலைவரின் மகன் ஆஸ்திரேலியாவில் சடலமாக மீட்பு

தெலங்கானா மாநிலத்தின் ரங்காரெட்டி மாவட்டம் ஷாத்நகரைச் சேர்ந்த மறைந்த பாஜக தலைவர் ஆரத்தி கிருஷ்ண யாதவின் ஒரே மகன் அரவிந்த் யாதவ். இவர் வேலைக்காக ஆஸ்திரேலியாவில் குடியேறியுள்ளார்.

ஒன்றரை வருடங்களுக்கு முன்பு அரவிந்த் திருமணம் செய்து கொண்டார். அவரது மனைவி கர்ப்பமாக இருக்கிறார்.

சமீபத்தில் அரவிந்தின் அம்மா உஷாராணி ஆஸ்திரேலியாவிற்கு சென்றிருக்கிறார். ஆனால், அங்கு வானிலை மோசமாக இருந்ததால் கடந்த வாரத்தில் சொந்த ஊரான ஷாத்நகருக்கு திரும்பினார் உஷாராணி.

அந்த வகையில், விடுமுறை தினத்தை சொந்த ஊரில் இருக்கும் குடும்பத்தினருடன் செலவிட ஷாத்நகர் வர விமான டிக்கெட்டுகளையும் முன்பதிவு செய்திருந்தார் அரவிந்த்.

சாம்பவம் நடந்த அன்று அவரது காரை கழுவ வெளியே சென்றிருக்கிறார் அரவிந்த். வெகு நேரமாகியும் வீடு திரும்பாததால், குடும்பத்தினர் அச்சப்பட்டு உடனடியாக போலீசில் புகார் கொடுத்துள்ளனர். அந்த வகையில், அப்பகுதியில அரவிந்தை தேடும் பணி தீவிரமாக மேற்கொள்ளபட்டது.

இதற்கிடையில், ஒரு ஆணின் சடலம் அப்பகுதீயின் கடற்கரையில் மிதந்தவாறு கண்டெடுக்கப்பட்டது. அந்த வகையில், சடலத்திற்கு டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்ளபட்டதில் அது அரவிந்த் என்பது தெரியவந்துள்ளது.

மிகவும் மர்மமான முறையில் மரணித்த அரவிந்த் கொலை செய்யபட்டாரா அல்லது தற்கொலையா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அரவிந்தின் மரணத்தால் அவரது பெற்றோர் மற்றும் குடும்பத்தினர் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பான முழு விவரம் இன்னும் தெரியவரவில்லை.

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!