மலேசியாவின் தாய் திட்டியதால் கொடூரமாக கொலை செய்த மகன்

மலேசியாவின் Muar நகருக்கு அருகே உள்ள Taman Temiang வட்டாரத்தில் தமது 73 வயது தாயாரைக் குத்திக் கொன்ற சந்தேகத்தில் 43 வயது நபர் கைது செய்யப்பட்டுள்ளார்
குறித்த நபர் மனநோயால் பாதிக்கப்பட்டவர் என்று Muar மாவட்டக் பொலிஸ் தலைமையதிகாரி தெரிவித்துள்ளார்.
தாய் திட்டிய காரணத்தால் நபர் தமது தாயாரைக் கத்தியால் குத்தியதாக நம்பப்படுகிறது.
தாயாருக்குத் தலையிலும் கழுத்திலும் பலத்த காயங்கள் ஏற்பட்டு அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் குறித்த நபர் பயன்படுத்தியதாக நம்பப்படும் கத்தியையும் கோடரியையும் பொலிஸ் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
மனநோயால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றவர்களுக்கு ஆபத்து விளைவிக்காமல் இருக்க அவர்களை அணுக்கமாகக் கண்காணிக்கவேண்டும் என்று Muar மாவட்ட பொலிஸ் தலைமையதிகாரி கூறினார்.
(Visited 18 times, 1 visits today)