அளவிற்கு அதிகமாக சமைத்தால் ஊட்டச்சத்துக்களை இழக்கும் சில காய்கறிகள்

நாம் சாப்பிடும் உணவின் ஊட்டச்சத்துக்களை முழுமையாக பெற அதனை சரியான வகையில் சாப்பிட வேண்டும். காய்கறிகள் மற்றும் பிற உணவுகளை சமைத்தல் மற்றும் சாப்பிடும் முறைகளில் செய்யும் சில தவறுகள் காரணமாக, அதன் ஊட்டச்சத்துக்களை இழக்க நேரடலாம்.
காய்கறிகள் அனைத்துமே ஊட்டச்சத்துக்களின் களஞ்சியங்கள் தான். காய்கறிகள் உள்ள வைட்டமின்கள் ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் கிட்ட பிற ஊட்டச்சத்துக்கள், உடலுக்கு முழுமையாக கிடைக்க அதனை சரியான வகையில் சாப்பிடுவது முக்கியம்.
சில காய்கறிகளை அளவிற்கு அதிகமாக வேக வைத்தால் அல்லது சமைப்பது காரணமாக, அதன் ஊட்டச்சத்துக்களை இழக்கும் அபாயம் உள்ளது என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். இதனால் உடலுக்கு எந்தவித நன்மையும் கிடைக்காமல் போகலாம்.
கீரை: பச்சை காய்கறிகளில் மிகவும் சிறந்ததாக கருதப்படும் கீரையில், வைட்டமின் சி போலெட் இரும்புச்சத்து உள்ளிட்ட பல வைட்டமின்கள் மற்றும் கனிமங்கள் நிறைந்துள்ளன. இதன் ஊட்டச்சத்தினை முழுமையாக பெற, இதனை அளவோடு வேக வைக்க வேண்டும் என்பதோடு குறைந்த தீயில் சமைப்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.
கேரட்: பீட்டா கரோட்டின் நிறைந்த கேரட் பல வகைகளில் ஆரோக்கிய நன்மைகளை அள்ளித் தரக்கூடியது. இதனை அளவிற்கு அதிகமாக சமைப்பதால் இதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் கிடைக்காமல் போய்விடும்.
குடைமிளகாய்: வைட்டமின் சி நிறைந்துள்ள குடைமிளகாயை அளவிற்க்கு அதிகமாக சமைப்பதால், ஊட்டச்சத்துக்கள் அழிந்துவிடும்.
ப்ரோக்கோலி: ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள் வைட்டமின்கள் நிறைந்துள்ள புரோக்கலியை அளவிற்கு அதிகமாக சமைத்தால், அதன் ஊட்டச்சத்துக்கள் உடலுக்கு முழுமையாக கிடைக்காது.
காலிபிளவர்: புரோக்களியை போலவே காலிபிளவரையும் அளவிற்கு அதிகமாக சமைப்பதால், அதன் ஊட்டச்சத்துக்களை முழுமையாக பெற முடியாமல் போய்விடும்.
தக்காளி: லைகோபீன் மற்றும் வைட்டமின் சி நிறைந்த தக்காளியை, அளவிற்கு அதிகமாக சமைப்பதால் அதன் ஊட்டச்சத்துக்கள் அழிந்துவிடும் ஆபத்து உள்ளது.