தைராய்டின் சில ஆரம்ப கால அறிகுறிகள்
உலகளவில் தைராய்டு நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்கின்றன தரவுகள்.
இன்றைய வாழ்க்கை முறை, உணவு பழக்கம் காரணமாக ஏற்படும் உடல் பருமன் மற்றும் ஹார்மோன் கோளாறுகள் போன்றவற்றினால் தைராய்டு பிரச்சனைகள் அதிகரிக்க ஆரம்பித்துள்ளன.
கழுத்தின் உட்புறத்திலும் காலர் எலும்பிலும் ஒரு பட்டாம்பூச்சி வடிவ சுரப்பி தான் திராய்வு சுரப்பி. இது ஒரு வகையான எண்டோகிரைன் சுரப்பி.
தைராய்டு சுரப்பது அதிகரிப்பது அல்லது குறைவது போன்ற பிரச்சனை பொதுவாக பெண்களுக்குதான் அதிகம் ஏற்படுகின்றன.
தைராய்டில் இரண்டு வகைகள் உள்ளன – ஹைப்பர் தைராய்டிசம் மற்றும் ஹைப்போ தைராய்டிசம். பொதுவாகவே, எந்தவொரு நோயின் அறிகுறிகளையும் ஆரம்ப கட்டத்தில் கண்டறிவதன் மூலம், ஆரோக்கியத்திற்கு ஏற்படும் சேதத்தை பெருமளவில் குறைக்கலாம்.
இன்றைய வாழ்க்கை முறை காரணமாக, அதிகரித்து வரும் தைராய்டு பிராச்சனைகள் உண்மையில் கவலைக்குரிய விஷயம். இந்நிலையில், தைராய்டு பிரச்சனை தொடர்பான அறிகுறிகளை அறிந்து கொள்ளலாம்.
கைகள் மற்றும் கால்கள் நடுக்கம் – உங்கள் கைகள் மற்றும் கால்கள் அடிக்கடி நடுங்கினால், தைராய்டு பிரச்சனை இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்.
பலவீனம் – தைராய்டின் ஆரம்ப அறிகுறிகளில் பலவீனமும் அடங்கும். நீங்கள் வழக்கத்திற்கு மாறாக, காரணம் ஏதும் இல்லாமல், மிகவும் பலவீனமாகவோ அல்லது சோர்வாகவோ உணர்ந்தால், நீங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
நரம்புத் தளர்ச்சி- உங்களுக்கு தொடர்ந்து பதற்ற உணர்வு அதிகம் இருந்தால், நீங்கள் நிச்சயமாக ஒரு நல்ல மருத்துவரை அணுக வேண்டும், ஏனெனில் பதட்டமாக இருப்பது தைராய்டின் அறிகுறியாகவும் இருக்கலாம்.
தசை வலி – தைராய்டின் ஆரம்ப அறிகுறிகளில் தசை வலி அடங்கும். தசைகளில் பலவீனம் அல்லது வலி உணர்வு தைராய்டின் அறிகுறியாக இருக்கலாம்.
உடல் எடை அதிகரித்தல் அல்லது குறைதல் – எந்த காரணமும் இல்லாமல் திடீரென எடை அதிகரிப்பது அல்லது எடை குறைவது தைராய்டின் முக்கிய அறிகுறிகளில் ஒன்றாகும்.
எரிச்சல்- தைராய்டு அறிகுறிகளில் மனநிலை மாற்றங்களும் அடங்கும். அடிக்கடி எரிச்சல் உணர்வு தைராய்டின் அறிகுறியாக இருக்கலாம்.
அதிக வியர்வை – அதிக அளவில் வியர்த்தல் தைராய்டின் அறிகுறியாக இருக்கலாம்.
தூக்கமின்மை – தைராய்டு பிரச்சனைகளில் முக்கிய அறிகுறி இரவில் தூக்கமின்மை பிரச்சனை. நீங்கள் தூக்கமின்மை பிரச்சனையையும் எதிர்கொண்டால், உங்களுக்கு தைராய்டு இருப்பதற்கான வாய்ப்புகள் அதிக அளவில் உள்ளது.
கைகள் மற்றும் கால்கள் ஜில்லென்று இருத்தல் – கைகள் மற்றும் கால்கள் ஜில்லென்று இருத்தல் அல்லது கை மற்றும் கால்களில் வலி உணர்வு தைராய்டு அறிகுறியாக இருக்கலாம்.
இதயத் துடிப்பு அதிகரித்தல் அல்லது குறைதல் – உங்கள் இதயத் துடிப்பு திடீரென அதிகரித்தால் அல்லது குறைந்தால், நீங்கள் கவனமாக இருக்க வேண்டும்.