பாகிஸ்தானில் போராளிகளின் மறைவிடத்தை குறிவைத்து தாக்கிய படையினர் : கேப்டன் பலி!

பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினர் நாட்டின் வடமேற்கில் ஒரு போராளிகளின் மறைவிடத்தைத் தாக்கியுள்ளனர்.
இதில் ஒரு இராணுவத் தளபதி மற்றும் 10 போராளிகள் கொல்லப்பட்டனர் என்று இராணுவம் தெரிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தானின் எல்லையை ஒட்டிய கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் ஒரு மாவட்டமான தேரா இஸ்மாயில் கானில் இந்த சோதனை நடத்தப்பட்டது என்று இராணுவம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
கொல்லப்பட்ட அதிகாரி கேப்டன் ஹஸ்னைன் அக்தர் என்று அடையாளம் காணப்பட்டுள்ளார்.
அவர் தனது படைகளை முன்னணியில் இருந்து வழிநடத்திச் சென்றதாகவும், “தைரியமாக” போராடிய பிறகு இறிதியாக உயிர் துறந்ததாகவும் படையினர் தெரிவித்துள்ளனர்.
இராணுவம் இறந்த போராளிகளை “க்வாரிஜ்” என்றும் விவரித்தது, இது பாகிஸ்தான் தாலிபான்களுக்கு அரசாங்கம் பயன்படுத்தும் சொற்றொடராகும்.
(Visited 1 times, 1 visits today)