இலங்கையில் சமூக ஊடக மோசடிகள் அதிகரிப்பு: அரசாங்கத்தின் எச்சரிக்கை
வட்ஸ்அப் போன்ற சமூக ஊடகங்கள் ஊடாக ஆன்லைன் நிதி மோசடிகளில் சிக்கித் தவிக்கும் பொதுமக்கள் பொலிஸ் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு அறிவிக்குமாறு கோரப்பட்டுள்ளது.
dir.ccid@police.gov.lk என்ற ஊடாக பொலிஸ் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு மின்னஞ்சல்களை அனுப்பி முறைப்பாடுகளை பதிவு செய்யலாம் .
ஃபேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப் போன்ற சமூக ஊடக கணக்குகளை ஹேக் செய்வதன் மூலம் பொதுமக்கள் நிதி மோசடி செய்யப்படுவதாக பல புகார்கள் வந்ததை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இணைப்புகளைத் திறக்கவோ அல்லது ஒரு முறை கடவுச்சொற்கள் (OTP/ PIN), குறியீடுகள் அல்லது SMS அல்லது WhatsApp செய்திகள் மூலம் அனுப்பப்படும் நிதி உதவிக்கான கோரிக்கைகளுக்குப் பதிலளிக்கவோ வேண்டாம் என்றும் பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
(Visited 1 times, 1 visits today)