ஐரோப்பா செய்தி

பிரித்தானிய இளைஞர்களுக்கான சமூக ஊடக தடை– பொதுமக்களிடம் ஆலோசனை கோரும் அரசாங்கம்

இளைஞர்களை சமூக ஊடகங்களில் பாதுகாப்பது தொடர்பாக பொதுமக்களிடம் கருத்து கேட்கும் ஆலோசனையை பிரித்தானிய அரசு இன்று ஆரம்பித்துள்ளது.

இதன்போது 16 வயதுக்குட்பட்டவர்களை டிக்டொக், ஸ்னாப்செட், இன்ஸ்டாகிராம் போன்ற தளங்களில் இருந்து தடை செய்யவது குறித்து பரிசீலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி இரவு நேர சமூக ஊடக உபயோகத்தை கட்டுப்படுத்தல், முடிவற்ற ஸ்க்ரோல் மற்றும் ஒட்டோப்ளே போன்ற அம்சங்களுக்கு கட்டுப்பாடு,
குழந்தைகள் செட்போட்களைப் (chatbot) பயன்படுத்துவதைத் தடை செய்தல் போன்ற நடவடிக்கைகளும் பரிசீலிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இளைஞர்கள் சமூக வலைத்தளங்களுக்கு அடிமையாகமல் இருப்பதே இதன் நோக்கம் என கூறப்படுகிறது.

இதன் முடிவுகள் பிரித்தானியாவில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஆலோசனையின் பரிந்துரைகள் சரியானவையாக இருந்தால், தடைகள் சில மாதங்களுக்குள் அமல்படுத்தப்படும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.

அண்மையில், அவுஸ்திரேலியாவில் 16 வயதுக்குட்பட்டோருக்கு சில சமூக ஊடக தளங்களை பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டது.

பிரான்ஸ், ஸ்பெயின், ஆஸ்திரியா, டென்மார்க், பின்லாந்து, கிரீஸ் மற்றும் இத்தாலி போன்ற நாடுகளும் இதே மாதிரியான திட்டங்களை கொண்டுவர
எதிர்பார்த்துள்ளன.

Sainth

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!