பனிப்பொழிவு – ஐரோப்பாவில் பல விமான நிலையங்கள் மூடல்!
மத்திய ஐரோப்பா முழுவதும் பனிப்பொழிவு அதிகரித்துள்ளதன் காரணமாக சில விமான நிலையங்கள் பயண இடையூறுகளை சந்தித்துள்ளன.
இதற்கமைய புடாபெஸ்ட் (Budapest), வியன்னா (Vienna) , பிராக் (Prague) மற்றும் பிராடிஸ்லாவா (Bratislava) உள்ளிட்ட சில விமான நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.
சில ஐரோப்பிய நாடுகளில் வெப்பநிலையானது – 37 பாகை செல்ஸியஸாக பதிவாகியுள்ளது. இதன்காரணமாக பின்லாந்தின் கிட்டிலா விமான நிலையமும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
அங்கு ஆயிரக்கணக்கான பயணிகள் சிக்கி தவிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.





