சபாநாயகரின் அறைக்குள் நுழைந்த பாம்பு – பாதுகாப்பு கோரும் சஜித்!
நாடாளுமன்றத்திற்குள் நுழையும் பாம்புகளிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்யுமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவிடம் வலியுறுத்தினார்.
நாடாளுமன்றத்தில் சபாநாயகரின் அறைக்குள் ஒரு பாம்பு நுழைந்ததாகக் கேள்விப்பட்டதாகவும், நாடாளுமன்றத்திற்குள் நுழையும் பாம்புகளிடமிருந்து சபாநாயகரையும் எம்.பி.க்களையும் பாதுகாக்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
நாடாளுமன்றமானது சுற்றுச்சூழல் உணர்திறன் வலயத்தில் அமைந்துள்ளதால், பாம்புகள் நுழைவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
(Visited 3 times, 3 visits today)




