பாரிஸ் விமான நிலையத்தில் பரவிய புகை மூட்டம் : அச்சத்தில் பயணிகள்!

பாரிஸின் பிரதான விமான நிலையத்தில் பெரும் புகை மூட்டம் காணப்படுவதால் தீவிபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் ஒலிம்பிக் போட்டிகளை காணவரும் பயணிகள் அச்சத்தில் உள்ளனர்.
சார்லஸ் டி கோலில் உள்ள டெர்மினல் 2 எஃப் இலிருந்து அடர்த்தியான புகைகள் கருமேகங்கள்போல் விமான நிலையத்தை சுற்றி காட்சியளித்துள்ளன.
குறித்த பகுதியில் தரித்து நிறுத்திவைக்கப்பட்டிருந்த பேருந்து ஒன்று தீப்பிடித்ததால் இந்நிலை ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருவதுடன், தீயணைப்பு வீரர்களும் குவிக்கப்பட்டுள்ளனர்.
(Visited 43 times, 1 visits today)