ஜோகன்னஸ்பர்க்கில் சிறிய நிலநடுக்கம் பதிவு!

தென்னாப்பிரிக்காவின் மிகப்பெரிய நகரமான ஜோகன்னஸ்பர்க்கில் சிறிய நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளது.
உள்ளூர் நேரப்படி அதிகாலை 2:38 மணிக்கு 5.0 ரிக்டர் அளவில் குறித்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜோகன்னஸ்பர்க்கின் தென்கிழக்கு புறநகரில் உள்ள ஆல்பர்டனில் இருந்து 6 கிலோமீட்டர் (3.7 மைல்) தொலைவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேத விபரம் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.
இதேவேளை தென்னாப்பிரிக்காவில் நிலநடுக்கம் ஏற்படுவது அரிது. அமெரிக்க புவியியல் ஆய்வின்படி, கடைசியாக 2014 இல் 5.0 அளவு அல்லது அதற்கும் அதிகமாக அளவிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
(Visited 14 times, 1 visits today)