செய்தி விளையாட்டு

SLvsWI – இலங்கை அணிக்கு 190 ஓட்டங்கள் இலக்கு

இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான 2வது ஒருநாள் போட்டி, கண்டி- பல்லேகல மைதானத்தில் இன்று ஆரம்பமானது.

இப்போட்டி மழை காரணமாக போட்டி சற்று தாமதமாகவே ஆரம்பமானது.

இந்நிலையில், போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தது.

இந்த போட்டியானது 44 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட நிலையில், முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 36 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 189 ஓட்டங்களை மட்டுமே பெற்றது.

மேற்கிந்திய தீவுகள் அணி சார்பில் Sherfane Rutherford அதி கூடிய ஓட்டங்களாக 80 ஓட்டங்களையும் Gudakesh Motie ஆட்டமிழக்காமல் 50 ஓட்டங்களையும் பெற்றனர்.

இலங்கை அணி சார்பில் பந்துவீச்சில் Wanindu Hasaranga 8 ஓவர்கள் பந்து வீசி 40 ஓட்டங்களை கொடுத்த நிலையில் 4 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

இந்த போட்டியில் 190 ஓட்டங்களை பெற்றால் இலங்கை அணிக்கு வெற்றி கிட்டும்.

(Visited 70 times, 1 visits today)

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி