செய்தி விளையாட்டு

SLvsNZ – இலங்கை அணிக்கு 136 ஓட்டங்கள் இலக்கு

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2 போட்டிகள் கொண்ட T20 கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி தம்புள்ளையில் தற்சமயம் இடம்பெற்று வருகிறது.

இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற நியூசிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி 19.3 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 135 ஓட்டங்களை பெற்றுள்ளது.

அந்த அணி சார்பில் துடுப்பாட்டத்தில் Michael Bracewell மற்றும் Zakary Foulkes ஆகியோர் தலா 27 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்ததுடன் ஏனைய அனைத்து வீரர்களும் சொற்ப ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தனர்.

பந்து வீச்சில் இலங்கை அணி வீரர்கள் சிறப்பாக செயற்பட்ட நிலையில், Dunith Wellalage 03 விக்கெட்டுக்களையும், Nuwan Thushara, Wanindu Hasaranga, Matheesha Pathirana ஆகியோர் தலா 02 விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.

இதன்படி இலங்கை அணிக்கு 136 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!