SLvsIND – இந்திய அணிக்கு 231 ஓட்டங்கள் இலக்கு
இந்தியா- இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி கொழும்பில் நடைபெற்று வருகிறது.
டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங் தேர்வு செய்தது. இந்திய அணியில் கே.எல்.ராகுல், ஷிவம் டுபே ஆகியோர் இடம் பிடித்தனர்.
இலங்கை அணியின் பதும் நிசாங்கா, அவிஷ்கா பெர்னாண்டோ ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.
அவிஷ்கா பெர்னாண்டோ 1 ரன் எடுத்த நிலையில் முகமது சிராஜ் பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த குசால் மெண்டிஸ் 14 ரன்னிலும், சதீரா சமரவிக்ரமா 8 ரன்னிலும், சரித் அசலங்கா 14 ரன்னிலும் வெளியேறினார்.
ஒரு பக்கம் விக்கெட் வீழ்ந்தாலும் மறுமுனையில் பதும் நிசாங்கா சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்தார். தொடர்ந்து விளையாடிய அவர் 56 ரன்னில் வெளியேறினார்.
நிசாங்கா ஆட்டமிழக்கும்போது இலங்கை அணி 26.3 ஓவரில் 101 ரன்கள் எடுத்திருந்தது. 7-வது வீரராக களம் இறங்கிய துனித் வெலாலகே அரைசதம் அடிக்க இலங்கை அணி 200 ரன்களை தாண்டியது.
இறுதியாக 50 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 230 ரன்கள் எடுத்துள்ளது. வெலாலகே 65 பந்தில் 66 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இந்திய அணி சார்பில் அர்ஷ்தீப் சிங், அக்சர் பட்டேல் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். முகமது சிராஜ், ஷிவம் டுபே, குல்தீப் யாதவ், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.





