செய்தி விளையாட்டு

SLvsENG Test – வலுவான நிலையில் இங்கிலாந்து அணி

எமிரேட்ஸ் ஓல்ட் ட்ரஃபோர்ட் மைதானத்தில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் மூன்றாவது நாள் ஆட்டம் நிறைவடைந்த நிலையில், இலங்கைக்கு எதிரான வெற்றியை நோக்கி இங்கிலாந்து நகர்கிறது.

இங்கிலாந்தின் ஜேமி ஸ்மித் தனது முதல் டெஸ்ட் சதத்தைப் பூர்த்தி செய்ததன் மூலம் தொடங்கிய இன்றைய நாளின் முடிவில் இலங்கை அணி 204-6 ரன்களுடன் 3ம் நாளை முடித்தனர்.

இன்றைய நாள் ஆரம்பிக்கும் போது இங்கிலாந்து அணி 259 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்களை இழந்து 23 ஓட்டங்கள் முன்னிலையில் இருந்தது.

இந்நிலையில் இங்கிலாந்து விக்கெட் காப்பாளர் ஸ்மித் தனது முதலாவது சதம் மூலம் இங்கிலாந்து அணியை வலுவான நிலைக்கு அழைத்து சென்றார்.

மேலும் இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்சில் சகல விக்கெட்களையும் இழந்து 358 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதன்மூலம் இங்கிலாந்து அணி இலங்கையை விட 122 ஓட்டங்கள் முன்னிலையில் இருந்தது.

இலங்கை அணி சார்பில் அசித்த பெர்னாண்டோ 4 விக்கெட்களை கைப்பற்றினர்.

இதனை தொடர்ந்து தனது இரண்டாவது இன்னிங்க்ஸை ஆரம்பித்த இலங்கை அணி முதலிலே தடுமாற துடங்கியது.

இதன் மூலம் இன்றைய நாள் முடிவடைந்த நிலையில் இலங்கை அணி 6 விக்கெட்களை இழந்து 204 ஓட்டங்களை பெற்றுள்ளது.

அதாவது இலங்கை அணி இங்கிலாந்து அணியை விட 82 ஓட்டங்கள் முன்னிலையில் உள்ளது.

இலங்கை அணி சார்பில் மத்தியூஸ் 65 ஓட்டங்களை, ஆட்டமிழக்காமல் கமிந்து மெண்டிஸ் 56 ஓட்டங்களுடனும் உள்ளார்.

(Visited 65 times, 1 visits today)

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!