SLvsBAN – இலங்கை அணிக்கு 249 ஓட்டங்கள் இலக்கு

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் இடம்பெற்று வருகிறது.
அதற்கமைய, நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 45.5 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 248 ஓட்டங்களை பெற்றது.
பங்களாதேஷ் அணி சார்பாக அதிகபட்சமாக Parvez Hossain Emon 67 ஓட்டங்களையும், Towhid Hridoy 51 ஓட்டங்களையும் Tanzim Hasan Sakib ஆட்டமிழக்காமல் 33 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
இதற்கமைய இலங்கை அணிக்கு 249 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
(Visited 2 times, 2 visits today)