SLvsBAN – இலங்கை அணிக்கு 178 ஓட்டங்கள் இலக்கு

பங்களாதேஷ் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டாவது T20 போட்டியில் இலங்கை அணிக்கு 178 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 177 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.
அந்த அணி சார்பில் அணித்தலைவர் லிட்டன் தாஸ் அதிகபட்சமாக 76 ஓட்டங்களையும், ஷமீம் ஹொசைன் 48 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
பந்துவீச்சில் பினுர பெர்ணான்டோ 3 விக்கெட்டுகளையும் நுவான் துஷார மற்றும் மஷீஷ் தீக்ஷன ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுக்கள் வீதம் கைப்பற்றினர்.
(Visited 1 times, 1 visits today)