செய்தி விளையாட்டு

SLvsBAN – இரண்டாவது ஒருநாள் போட்டியில் வங்கதேசம் வெற்றி

இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் பங்களாதேஷ் அணி 16 ஓட்டங்களால் வெற்றிப்பெற்றுள்ளது.

கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் இடம்பெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 45.5 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 248 ஓட்டங்களை பெற்றது.

பங்களாதேஷ் அணி சார்பாக அதிகபட்சமாக ஹொசைன் 67 ஓட்டங்களையும், ஹ்ரிடோய் 51 ஓட்டங்களையும் சாகிப் ஆட்டமிழக்காமல் 33 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

பந்து வீச்சில் இலங்கை அணி சார்பில் அசித 4 விக்கெட்டுக்களையும், ஹசரங்க 03 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.

இதற்கமைய 249 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 48.5 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 232 ஓட்டங்களை பெற்ற நிலையில் தோல்வியடைந்து.

துடுப்பாட்டத்தில் இலங்கை அணி சார்பில் லியனகே அதிகபட்சமாக 78 ஓட்டங்களை பெற்றதுடன், குசல் மெண்டிஸ் 56 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

பந்து வீச்சில் பங்களாதேஷ் அணி சார்பாக தன்வீர் 5 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

இதன்படி 3 போட்டிகளைக் கொண்ட இந்த ஒருநாள் தொடரில் ஒன்றுக்கு ஒன்று என்ற கணக்கில் இரு அணிகளும் சமநிலையில் உள்ளன.

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!