அரசியல் இலங்கை செய்தி

நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு மூன்று வாக்குகளை வழங்கும் மொட்டு கட்சி!

“ பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட்டுள்ளமை பொருத்தமான அரசியல் நடவடிக்கையாகும்.”

இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் Sagara Kariyawasam தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தலைமையகத்தில் இன்று (09) நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை பொருத்தமற்ற – நெறிமுறையற்ற அரசியல் நடவடிக்கையென ஆளுங்கட்சி சுட்டிக்காட்டியுள்ளது.

இந்நிலையிலேயே மொட்டு கட்சி செயலாளர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

“ நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் மூன்று எம்.பிக்களும் வாக்களிப்பார்கள்.

தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்கள் பக்கம் நிற்கின்றனர் எனில் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும்.

அதேவேளை, எமது நாட்டுக்கு பொருத்தமானதொரு கல்வி மறுசீரமைப்பே அவசியம். எமது ஆட்சியின்கீழ் அதற்குரிய நடவடிக்கை எடுக்கப்படும்.” – என்றார் சாகர காரியவசம்.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!