சுதந்திரக்கட்சி மீண்டெழும்: கடமையேற்ற கையோடு சாமர சூளுரை!
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி (SLFP) நிச்சயம் மீண்டெழும் என்று அக்கட்சியின் தேசிய அமைப்பாளர் சாமர சம்பத் தயநாயக்க எம்.பி. Chamara Sampath Dayanayake தெரிவித்தார்.
சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளராக தெரிவு செய்யப்பட்ட அவர், இன்று (05) கட்சி தலைமையகத்தில் தமது கடமைகளை பொறுப்பேற்றார்.
அதன்பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே மேற்கண்டவாறு கூறினார்.
“ ஜே.வி.பியானது 3 உறுப்பினர்களை வைத்துக்கொண்டுதான் ஆட்சியை பிடித்தது. ஏற்ற, இறக்கங்களை அக்கட்சி சந்தித்தது. இன்று 159 எம்.பிக்கள் இருக்கின்றனர்.
எனவே, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் நிச்சயம் மீண்டெழும். அதை நோக்கி எமது பயணம் தொடரும். அதற்காக நான் அர்ப்பணிப்புடன் செயல்படுவேன்.
கட்சியை விட்டு சென்றவர்கள் நிச்சயம் மீண்டும் வருவார்கள், பல வருடங்கள் கட்சி தலைமையகம் பக்கம் வராதவர்கள்கூட இன்று வந்தார்கள். இதுதான் முன்னோக்கி செல்வதற்கான மாற்றம்.” – எனவும் சாமர சம்பத் தஸநாயக்க தெரிவித்தார்.





