இலங்கை

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நெருக்கடி: புதிய நியமனம் தொடர்பில் மைத்திரி தரப்பு கடும் கண்டனம்

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் புதிய தலைவர் ஒருவரை நியமிப்பதற்காக இன்று நடைபெற்ற அரசியல் கூட்டம் சட்டவிரோதமானது என அக்கட்சியின் ஒரு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவின் தலைமையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் தலைவரும் ஜனாதிபதியுமான சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் பங்குபற்றுதலுடன் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் தலைவராக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா நியமிக்கப்பட்டார்.

எவ்வாறாயினும், முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் தலைமையில் சட்டவிரோதமான அரசியல் கூட்டம் நடைபெற்றுள்ளதாக மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

அரசியல் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கும் அதிகாரம் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவருக்கு உண்டு என தெரிவித்த அந்த குழு, மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவின் பிரகாரம் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு தற்போது தலைவர் இல்லை எனவும் தெரிவித்துள்ளது.

எனவே, பதில் தலைவருக்கான எந்தவொரு நியமனமும் நீதிமன்ற உத்தரவின் ஊடாகவே நடத்தப்பட வேண்டும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

இன்றைய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கூட்டத்தில் பங்குபற்றிய பலர் அக்கட்சியின் அங்கத்தவர்கள் அல்ல எனவும் அந்த குழு மேலும் தெரிவித்துள்ளது

இன்றைய சந்திப்பின் போது மேற்கொள்ளப்பட்ட சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தரப்பு தெரிவித்துள்ளது.

(Visited 10 times, 1 visits today)

TJenitha

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்