நியூயார்க் சுரங்கப்பாதை ரயிலில் உறங்கிக்கொண்டிருந்த பெண் எரியூட்டிக் கொலை
நியூயார்க் ரயிலில் உறங்கிக்கொண்டிருந்த பெண் ஒருவரை தபர் ஒருவர் உயிருடன் எரித்துக் கொன்றதாக அந்நகரக் காவல்துறை தெரிவித்தது.இதில் அப்பெண் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
இச்சம்பவம் அமெரிக்க நேரப்படி டிசம்பர் 22ஆம் திகதி காலை நிகழ்ந்தது.
அவசரகால மீட்புப் பணியாளர்கள் தீயை அணைத்தனர்.ஆனால் அப்பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக காவல்துறை கூறியது.
இதையடுத்து, பெண்ணை எரியூட்டிக் கொன்ற நபரை அதிகாரிகள் வலைவீசித் தேடினர்.சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
உயிரிழந்த பெண்ணின் அடையாளம், வயது ஆகியவை உடனடியாக வெளியிடப்படவில்லை.
தாக்குதலுக்கான காரணம் இன்னும் தெரியவில்லை என்று அதிகாரிகள் கூறினர்.விசாரணை நடைபெறுவதாகத் தெரிவிக்கப்பட்டது
(Visited 2 times, 2 visits today)