வங்கதேசத்தில் தூங்கிக் கொண்டிருந்த இந்து தொழிலாளி உயிருடன் எரித்து கொலை
வங்கதேசத்தில்(Bangladesh) இந்து சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறைகளுக்கு மத்தியில், டாக்காவில்(Dhaka) 23 வயது இந்து இளைஞர் ஒருவர் தூங்கிக் கொண்டிருந்தபோது உயிருடன் எரித்து கொல்லப்பட்டுள்ளார்.
பாதிக்கப்பட்டவர் குமில்லா(Cumilla) மாவட்டத்தில் வசிக்கும் கோகன் சந்திர பௌமிக்(Kokan Chandra Bhowmik) என்பவரின் மகன் சஞ்சல் சந்திர பௌமிக்(Chanchal Chandra Bhowmik) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சஞ்சல் நர்சிங்டி(Narsingdi) காவல் எல்லையில் உள்ள கானாபரி(Kanabari ) மசூதி சந்தை பகுதியில் உள்ள ஒரு வாகன பழுதுபார்க்கு இடத்தில் பணிபுரிந்தார்.
சம்பவ தினத்ததன்று, வேலையை முடித்த சஞ்சல், சோர்வடைந்த பழுதுபார்க்கு இடத்தில் தூங்கிவிட்டார்.
இந்நிலையில், அடையாளம் தெரியாத நபர்கள் பழுதுபார்க்கு இடத்ததை தீ வைத்து எரித்தனர். உள்ளே அதிக அளவு பெட்ரோல், எண்ணெய் மற்றும் பிற எரியக்கூடிய பொருட்கள் இருந்ததால் தீ விரைவாக பரவியது.
தூங்கிக் கொண்டிருந்த பௌமிக் மூச்சுத் திணறல் மற்றும் தீக்காயங்களால் உயிரிழந்துள்ளார்.




