இலங்கையில் சரும வெண்மையாக்கும் கிரீம்களால்ஆபத்தான நிலை – மருத்துவர் எச்சரிக்கை

இலங்கையில் சருமத்தை வெண்மையாக்கும் கிரீம்களினால் பாதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருவதாக தேசிய விஷத் தடுப்பு மையத்தின் விசேட மருத்துவர் தீப்தி பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
ஊடக சந்திப்பில் பேசிய அவர், அது தொடர்பில் பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
வெண்மையாக்கும் கிரீம்களில் உள்ள ஸ்டெராய்டுகள், ஹைட்ரோகுவினோன் மற்றும் பாதரசம் போன்ற நச்சு ரசாயனங்கள் மெலனின் உற்பத்தியை பாதிக்கின்றன என்றும், இது தோல் நலத்தையும் உடல்நலத்தையும் துன்புறுத்துவதாகவும் கூறினார்.
இந்த நச்சுகள் நீண்ட காலம் பயன்படுத்தும் போது நரம்பு மண்டலம், சிறுநீரகம், மற்றும் கருப்பை வளர்ச்சிக்கும் ஆபத்தாக இருக்கக்கூடும். ஸ்டெராய்டுகள் நீரிழிவு அபாயத்தையும் அதிகரிக்கின்றன எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
“அழகு வேண்டி ஆரோக்கியத்தை இழக்க வேண்டாம்” என்ற கவனிப்பை பொதுமக்கள் கடைப்பிடிக்க வேண்டும் என மருத்துவ நிபுணர்கள் வலியுறுத்துகிறார்கள்.