அமெரிக்காவில் விபத்துக்குள்ளான ஹெலிகொப்டர் – ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐவர் உட்பட 6 பேர் பலி

அமெரிக்காவின் நியூயோர்க்கில் உள்ள ஹட்சன் ஆற்றில் சுற்றுலாப் பயணிகள் குழுவை ஏற்றிச் சென்ற ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளானதில் 6 பேர் உயிரிழந்தனர்.
இந்த விபத்து அமெரிக்க நேரப்படி நேற்று பிற்பகல் நிகழ்ந்தது. விமானியைத் தவிர இறந்த ஐந்து பேரும் ஸ்பெயினிலிருந்து வந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.
இறந்தவர்களில் மூன்று சிறுவர்களும் அடங்குவர்.
விபத்து தொடர்பாக ஒரு சிறப்பு அறிக்கையில், இறந்தவர்களின் குடும்பங்களுக்கு அறிவிக்கப்படும் வரை பாதிக்கப்பட்டவர்களின் அடையாளங்கள் வெளியிடப்படாது என்று நியூயோர்க் பொலிஸ் ஆணையர் தெரிவித்தார்.
விபத்துக்கான காரணம் இன்னும் வெளியாகவில்லை.
(Visited 1 times, 1 visits today)