வியட்நாமில் குரங்கம்மை பாதிப்பால் அறுவர் உயிரிழப்பு

தென்கிழக்கு ஆசிய நாடான வியட்நாமில் குரங்கம்மை நோய் வேகமாக பரவுகிறது.
நாட்டின் தெற்கு மாகாணமான லாங் ஆன்னில் நோய் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் அங்கே இதுரை 117 பேர் குரங்கம்மை பாதிப்புக்குள்ளாகி உள்ளனர்.மேலும் குரங்கம்மை பாதிப்பு காரணமாக இதுவரை 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
நவம்பர் மாதம் முதல் தொற்றுநோய்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக ஹோ சி மின் நகரத்தின் வெப்பமண்டல நோய்களுக்கான மருத்துவமனையைச் சேர்ந்த டாக்டர் ஹுய்ன் தி துய் ஹோ கூறுகையில், கடந்த மூன்று மாதங்களில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 49 பாதிப்புகளில் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
40 பேர் குணமடைந்ததுடன், மூன்று பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று அவர் தெரிவித்துள்ளார்.
(Visited 10 times, 1 visits today)