இலங்கை

இலங்கை: இழுவை படகில் 60 கிலோ போதைப்பொருளுடன் 6 பேர் கைது

இலங்கைக்கு மேற்கே கடற்பகுதியில் சுமார் 60 கிலோ போதைப்பொருளை ஏற்றிச் சென்ற மீன்பிடி படகு ஒன்று தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாகவும், கப்பலில் இருந்த 6 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

இலங்கைக்கு மேற்கே உள்ள உயர் கடற்பரப்பில் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் மூலம், உள்ளூர் பல நாள் மீன்பிடி இழுவை படகு ஒன்று இன்று (14) போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் 06 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அந்த இழுவை படகில் சுமார் 60 கிலோகிராம் போதைப்பொருள் இருந்ததாக சந்தேகிக்கப்படுவதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபர்கள் மற்றும் போதைப் பொருட்களுடன் இழுவை படகு கடற்படையினரால் மேலதிக விசாரணைக்காகவும் சட்ட நடவடிக்கைகளுக்காகவும் கரைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

(Visited 1 times, 1 visits today)
See also  இலங்கை தொடர்பில் அமெரிக்க தூதரகம் விடுத்துள்ள செய்தி!
Avatar

TJenitha

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்

You cannot copy content of this page

Skip to content